தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக ஊடகவியலாளர் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "த நேசன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் "த நேசன்" வார ஏட்டின் அரசியல் பத்தி பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் ஊடகவியலாளர்களைப் பொறுத்த வரையில் இதுவொரு இக்கட்டான சூழ்நிலையாகவே காணப்படுகிறது. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக ஊடகவியலாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
போர் தொடர்பான செய்திகளை திரட்டும் அநேக ஊடகவியலாளர்கள் விசாரணைகளுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாகின்றமை தவிர்க்க முடியாது ஒரு நிலைமையாக மாறியுள்ளது.
சட்டம், ஒழுங்கை காரணம் காட்டி எவ்வித விசாரணைகளிமின்றி பல சந்தர்பங்களில் அரசாங்கத்தினால் ஊடகவியலாளர்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
ஊடகவியலாளர் பரமேஸ்வரிக்கு எதிரான நடவடிக்கைகளை இதற்கு மேற்கோள் காட்டலாம். இறுதியில் எந்தவித குற்றச்சாட்டுக்களுமின்றி அவர் விடுதலை செய்யப்பட்டார்.
தற்போது ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்தை அரசாங்கப் படைத்தரப்பு கைது செய்து, தடுத்து வைத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்தின் வழக்குத் தொடர்பாக நாங்கள் இங்கு வாதிட விரும்பவில்லை. எனினும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் அவ்வாறின்றி காலவரையறையற்ற தடுத்து வைத்தல் உசிதமான சட்டநடவடிக்கையாக அமையாது என்பதையே நாங்கள் இங்கு வலியுறுத்த விரும்புகின்றோம்.
தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக எங்களுக்கு அறியக்கிடைத்தது.
திஸ்ஸநாயகத்தின் மனைவி மீது விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் தமது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
திரு. திஸ்ஸநாயகத்தின் துணைவியாரான ரொனிட்டா ஆசீர்வாதம் பிரபல அரச சார்பற்ற நிறுவனமான ஒக்ஸ்பாம் நிறுவனத்தில் பணிபுரிகின்றார்.
மேலும், அவர் ஆரம்ப காலத்தில் டெய்லி மிரர் பத்திரிகையின் ஊடகவியலாளராகவும் கடமையாற்றியுள்ளார். திரு திஸ்ஸநாயகம் அவர்களும் "டெய்லி மிரர்" நாளேட்டின் ஆசிரியர் குழாமின் அங்கத்தவராக கடமையாற்றியுள்ளார்.
தமது கட்சிக்கு எதிரான தகவல்களை வெளியிடும் ஊடகவியலாளர்கள் மீது ஆளுங்கட்சியைப் போன்றே எதிர்க்கட்சியும் தனது அடக்குமுறைகளை வலிந்து அரங்கேற்றி வருகின்றது.
தங்களது வழிக்குவர மறுதலிக்கும் சுயாதீன ஊடகவியலாளர்களக்கு எதிராக செயற்படுகின்ற தீய பழக்கம் அரசாங்கத்தைப் போன்றே ஐக்கிய தேசியக்கட்சியிடமும் காணப்படுகிறது.
அரசாங்கத்திற்கு சொந்தமான லேக் ஹவுஸ் நிறுவனத்தின் மூலம் அரசாங்கத்தின் அனைத்து அழுக்கான நடவடிக்கைகளும் அரங்கேற்றப்படுகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பான ஊடகங்களின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி இந்த ஊடக அடக்குமுறைகளை அமுல்படுத்துகின்றது.
ஊடகங்களைப் பாதுகாத்தல், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்தல் போன்ற அனைத்து செயற்பாடுகளுமே தமது சுயலாப நோக்கிலேயே இந்த பிரதான கட்சிகளும் மேற்கொள்கின்றன.
எனினும், மெய்யான ஊடக சுதந்திரம் பற்றி இந்த இரண்டு கட்சிகளினதும் நிலைப்பாடு சற்று சந்தேகத்தை தோற்றுவிக்கும் நிலைமையாகவே விதந்துரைக்கின்றது.
ஊடகங்களைப் பாதுகாக்கும் புதிய பீஷ்மர் ஒருவரை நாங்கள் எதிர்க்கட்சியிலிருந்து அவதானிக்கின்றோம். அவர் வேறு யாருமல்ல கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல ஆவார்.
ஊடகவியலாளர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய புதிய கோட்பாடுகளை லக்ஸ்மன் கிரியெல்ல முன்வைத்துள்ளார். புதிய ஊடக கலாச்சாரமொன்றை உருவாக்க அவர் முயற்சிகளை முன்னெடுத்துள்ளார்.
லக்ஸ்மன் கிரியெல்ல, அமைச்சர் மேர்வின் சில்வா ஆகியோர் யார் சிறந்த அரசியல் கோமாளி என்ற பட்டத்திற்காக கடுமையாக போட்டியிடுவதாகவே நாம் நோக்குகின்றோம்.
அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பின் போது அதனை தோற்கடிக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆழ்ந்த உறக்கம் கலைந்தது. அவர்களால் பெரும்பான்மை நாடாளுமன்ற பலத்தை காண்பிக்க முடியாது போனது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் சமையலறை பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஐக்கிய தேசியக் புதிய போராட்டமொன்றை எதிர்வரும் 3 ஆம் நாள் முன்னெடுக்க உள்ளது. இதுவே ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அரசியல் தந்திரோபாயமாகக் கருதப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பெண்கள் முன்னணி வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிரான போராட்டத்தில் களமிறங்கவுள்ளது. இதன் மூலம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கும் பொதுமக்களின் நல் அபிப்பிராயத்தை தம் பக்கம் திசை திருப்பிக்கொள்ள முடியும் என்பதே அவர்களது தந்திரோபாயமாக காணப்படுகிறது.
வடபோர் முனை போர்ச் செலவுகள் மற்றும் நாட்டின் கடன் பழு குறித்து ஐக்கிய தேசியக் கட்சி மிகக் குறைந்தளவிலேயே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டியுள்ளது.
இந்த நாட்டிற்கு எந்த ரீதியிலும் ஒவ்வாத வகையில் அமைச்சர்களுக்கும், அமைச்சரவைகளுக்கும் பாரியளவில் நிதி செலவிடப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சி இந்த நிலைமைகளை சரியான முறையில் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினால் அதுவே வாழ்க்கைச் செலவு சுமையால் அழுந்தித் தவிக்கும் பொதுமக்களை தம்பால் ஈர்த்துக்கொள்ள சிறந்த வழிமுறையாக அமையும்.
எனினும், இவற்றை சரியாக முன்னெடுத்துச் செல்லக்கூடிய அரசியல் பலம் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியிடம் இல்லை எனக் கூறலாம். குறிப்பாக முன்னாள் அரச தலைவர்களான ஜே.ஆர்.ஜயவர்த்தன மற்றும் ரணசிங்க பிரேமதாச ஆகியோரின் காலத்தில் காணப்பட்ட கிராம மட்டத்திலான பலம் தற்போது வெகுவாக குறைவடைந்துள்ளது.
கிராமிய மட்டத்தில் தமது அதிகாரத்தை வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கில் அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியினால் செயலமர்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும், இந்த செயலமர்வு எதிர்பார்த்தளவு வெற்றியை அளிக்கவில்லை எனவும், மிகக் குறைந்தளவானோரே இதில் கலந்து கொண்டதாகவும் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிகிகின்றன.
கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்களுக்கும், தலைமைத்துவத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தும் நோக்கில் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும், ஏற்பாட்டாளர்களது குறைபாடுகளின் காரணமாக எதிர்பார்த்தளவு வெற்றியளிக்கவில்லை எனத் தெரியவருகிறது.
மக்களை திருப்தி செய்யாத போர் வெற்றிகள், வெற்றியாக கருதப்பட முடியாது என வடபோர் முனை தொடர்பாக கேணல் ஜெயவிலால் பெர்னாண்டோ கருத்து வெளியிட்டிருந்தார். இது நியாயமற்றது என பலர் கருதக்கூடும்.
போர் தொடர்பான கட்சியின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய சந்தர்ப்பமாக இது கருதப்படுகிறது.
வடக்கு போர் முடிவுக்குக் கொண்டுவர இராணுவத்தினர் முன்னெடுக்கும் போர் கடினமானது என்பதை தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ளும் மனோபக்குவம் கிராமப்புற மக்களுக்கு இல்லை.
படைத்தரப்பில இணைந்து தங்களது உயிர்களைத் தியாகம் செய்ய மக்கள் தயாராக உள்ளனர். இந்த யதார்தத்தத்தின் கீழ் மக்களின் எண்ணங்களை மாற்றியமைப்பது சிக்கலானதாக அமையும்.
போர் தொடர்பான ஊழல்கள் மற்றும் குறுகிய நோக்குடைய பிழையான அரசியல் தீர்மானங்களின் காரணமாக படையினர் எதிர்நோக்கக்கூடிய பாரதூரமான விளைவுகளை, ஐக்கிய தேசியக் கட்சி வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய தருணமே இதுவாகும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பல சந்தர்ப்பங்களில் வாய்ப்புக்களை வழங்கி ஐக்கிய தேசியக் கட்சி தனது குறுகிய கால ஆட்சிகாலத்தில் தவறிழைத்துள்ளது.
தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வெளியே மணிராசகுளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் முகாம் அமைக்க முயற்சித்த போது ஐக்கிய தேசியக் கட்சி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாதமையை இதற்கு மேற்கோளாக காட்டாலாம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகள் குறித்து மக்கள் விடுதலை முன்னணி தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்ததனைத் தொடர்ந்து சந்திரிகா பண்டாரநாயக்க ஆட்சியை கலைத்தார்.
கம்பஹா மாவட்டத்தின் தொம்பே தேர்தல் தொகுதியில் தொகுதி அமைப்பாளர் ஒருவர் நியமிக்கப்படாமை குறித்து கட்சி தலைமைத்துவம் பிரதேச அமைப்பாளர்கள் கேள்வி எழுப்பினர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் சந்திர ராஜகருணாவின் மகனை தொம்பே தேர்தல் தொகுதி அமைப்பாளராக நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதனாலேயே இந்தத் தாமதம் ஏற்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா இதற்கு பதிலளித்தார்.
1994 ஆம் ஆண்டுக்கு பின்னரான ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் செயற்பாடுகள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. மத்தியமயப்படுத்திய தலைமைத்துவத்தை காட்டிலும், ஒரு பரந்து விரிந்த வியூகமே ஐக்கிய தேசியக் கட்சிக்கு தற்போது தேவை எனத் தெரிவிக்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெறுதற்கரிய இந்த மானிடப் பிறவியைப் பெற்றவன் இப்பிறவியிலேயே இறைவனை அறிய முயலாது போனால் அவன் வானில் பிறந்தவனே ஆவான்.
Monday, March 31, 2008
Monday, March 3, 2008
71 பயணிகளுடன் கிழக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் ரோலர் படகு மீட்பு
இயந்திரக் கோளாறு காரணமாக 13 தினங்கள் கடலில் தத்தளித்த வெளிநாட்டுக்கப்பல் ஒன்றை இலங்கை கடற்படையினர் மீட்டு அதில் உயிருக்காகப் போராடிய 71 பேரைக் காப்பாற்றியுள்ளளர் என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன. தாய்லாந்திலும் மலேசியாவிலும் தொழில் வாய்ப்பு பெறும் நோக்கில் சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச்சென்ற கப்பலையே கடற்படையினர் இன்று மீட்டுள்ளனர். முல்லைத்தீவு கடற்பிரதேசத்தில் இருந்து 150 கடல் மைல் தொலைவில் சந்தேகத்துக்கு இடமான முறையில் இக்கப்பலை அவதானித்த கடற்படையினர் இக்கப்பலை திருகோணமலை துறைமுகத்தில் கரை சேர்த்துள்ளனர்.பர்மாவைச் சேர்ந்த 67 பேரும் பங்களாதேஷைத் சேர்ந்த 24 பேருமாக மொத்தம் 91 பேர் இக்கப்பலில் பிரயாணம் செய்துள்ளனர். இவர்களில் உண்ண உணவும் தண்ணீருமின்றி இறந்துபோன 20 பேரின் சடலங்களையும் கடற்படையினர் மீட்டுள்ளனர்.காப்பாற்றப்பட்ட 71 பேருக்கும் உணவுகளும் மருத்துவ சிகிச்சைகளும் கடற்படையினரால் திருகோணமலைத் துறைமுகத்தில் இப்போது வழங்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Friday, February 29, 2008
கொழும்பு அழுத்மாவத்தை குண்டு வெடிப்பு: காவல்துறையினர் உட்பட 7 பேர் காயம்

கொழும்பு கொட்டகேனா வோல் லேன் அழுத்மாவத்தை மோதரை ஹிப்பாவத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் குண்டு வெடித்துள்ளது.இன்று வெள்ளிக்கிழமை காலை 6.10 மணியளவில் தேடுதல் நடவடிக்கையின் போது வீடு ஒன்றினைக் காவல்துறையினர் சோதனையிட்ட போது, சந்தேகநபர் குண்டினை வெடிக்க வைத்ததாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இதன்போது 3 மகளிர் காவல்துறையினர் உட்பட 4 காவல்துறையினரும் 3 பொதுமக்களுமாக 7 பேர் காயமடைந்துள்ளனர். சந்ததேகநபரின் உடல் சிதறிப் பலியாகியுள்ளார்.காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த காவல்துறை அதிகாரியின் நிலை கவலைகிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டுத் தாக்குதலையடுத்து சம்பவ இடத்திற்கு மேலதிக படையினரும் காவல்துறையினரும் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டதோடு, அப்பகுதியில் மேலும் சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.தற்கொலை அங்கி -1தற்கொலை இடுப்புபட்டி -1கிளைமோர் குண்டுகள் - 6கைக்குண்டுகள் - 4 ஆகியன சம்பவ இடத்தில் நடத்திய தேடுதலின்போது படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது.தற்கொலைதாரி தங்கியிருந்த வீட்டின் காவல்துறையினர் சென்றபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. வீட்டின் கதவை திறக்குமாறு காவல்துறையினர் உரத்துக் கூறியும் கதவு திறக்கப்படவில்லை.இதனையடுத்து காவல்துறையினர் கதவை உடைத்து உட்சென்றபோது தற்கொலைதாரி குண்டு வெடிக்க வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, February 27, 2008
13 ஆவது திருத்த அமுலாக்கம் ஜனாதிபதி-ரணில் இணக்கம்
அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தத்துக்கமைய இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வைக்காண்பதற்கு அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அலரிமாளிகையில் நடத்திய பேச்சுவார்த்தையின் போது உறுதியளித்துள்ளார்.13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சட்டவலுவுள்ளதாகக் காணப்படுவதால் அதில் எந்தவிதமான இடைச் செருகலுமின்றி நடைமுறைச் சாத்தியமாக்கப்படுவதையே ஐக்கிய தேசியக்கட்சி வலியுறுத்துவதாகவும் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய சந்திப்பின் போது எடுத்துக் கூறியுள்ளார்.
நேற்றிரவு 7 மணிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் இந்த முக்கிய சந்திப்பு இடம் பெற்றது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் ஆளும் தரப்பு சார்பில் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்கள் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, விஸ்வாவர்ணபால, சர்வகட்சி பிரதிநிதிகள் குழுத்தலைவர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண ஆகியோர் இடம்பெற்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஐக்கிய தேசியக்கட்சி தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் ருக்மன் சேனாநாயக்கா, பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத் தரணி கே.என்.சொக்ஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் வரை நீடித்ததாகவும் பேச்சுகள் மிகச்சுமுகமாக இடம்பெற்றதாகவும் ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வகட்சி மாநாடு முன் வைத்திருக்கும் யோசனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முதலில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அப்போது, ஜனவரி மாதம் 23 ஆம் திகதி சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் அறிக்கையில் இடைக்கால அறிக்கையே சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் இறுதியறிக்கை விரைவில் முன்வைக்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இறுதியறிக்கை முன்வைக்கப்பட்ட பின்னரே ஐக்கிய தேசியக்கட்சி தனது முடிவை வெளியிட எண்ணியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த விடயத்தில் காலம் கடத்தப்படுவதை தாம் விரும்பவில்லை எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தமது முயற்சிகள் குறித்து விரிவாக விளக்கிக் கூறியுள்ளார்.
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சட்டரீதியானதென்பதை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அதில் எந்த விதமான இடைச் செருகல்களும் இடம்பெறாதவாறு நடைமுறைச்சாத்தியமாக்கப்படுவதையே ஐக்கிய தேசியக்கட்சி எதிர்பார்ப்பதாகவும் அப்படிச் செயற்படும் பட்சத்தில் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதில் எத்தகையை முரண்பாடுகளும் ஏற்படாது எனவும் ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறியுள்ளார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் ஆரோக்கியமான தொன்றல்லவெனத் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, அங்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடிய சூழ்நிலை சாதகமாகக் காணப்படவில்லை. சாதகமான சூழ்நிலை திரும்புவதற்கு முன்னர் அங்கு தேர்தல் நடத்தப்பட்டால் அதில் அரசியல் கட்சிகள் போட்டியிடுவதில் நெருக்கடி நிலை ஏற்படுமெனவும் அந்தத் தேர்தல் அர்த்தமற்றதொன்றாகவே காணப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், 17 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கமைய அரசியலமைப்புப் பேரவைக்கு உறுப்பினர்களை உடனடியாக நியமித்து அதனை இயங்கச் செய்யவேண்டுமென இங்கு எதிர்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
17 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அதுவரையில் அரசியலமைப்புப் பேரவைக்கு உறுப்பினர்களை நியமிக்க முடியாதிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
17 ஆவது அரசியலமைப்புத் திருத்தமும் சட்ட வலுவுள்ளதாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை வரும்வரை காத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாதெனவும் யாப்புத் திருத்தத்துக்கமைய பேரவையை அமைக்க முடியுமெனவும் தெரிவுக்குழுவின் அறிக்கை வந்தபின்னர் அது குறித்து கவனம் செலுத்த முடியுமெனவும் விளக்கமளித்தார்.
அடுத்து எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது தற்போதைய முயற்சிகள் சாதகமான அடிப்படையில் நடக்குமானால் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் பங்கேற்பது குறித்து கட்சி பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்திருக்கின்றார்.
மீண்டும் "சூரியன் எவ்.எம்'
Tuesday, February 26, 2008
யாழ் கடல்நீர்ஏரி பகுதியில் விடுதலைப்புலிகள், சிறீலங்கா படையினர் மோதல்

இன்று காலை 7.45 மணியளவில் சிறீலங்கா படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
கொம்பாந்துறை பகுதியை அண்மித்த பகுதியில் கரையோரபகுதியில் முன்னரங்க நிலைகளில் இருந்த சிறீலங்கா படையினர் விடுதலைப்புலிகளின் கடற்படையினரது ரோந்து அணிமீது தாக்குலை தொடுத்ததாகவும் இதனையடுத்து விடுதலைப்புலிகள் பதில்தாக்குதலை தொடுத்ததாகவும் இம்தோதல்கள் சுமார் 15 நிமிட நேரங்கள் இடம்பெற்றதாகவும் தெரியவருகிறது.
இம்மோதல்களையடுத்து சிறீலங்கா படையினரது பலாலி முகாமில் இருந்து ஆட்டிலறி எறிகணைகள், மற்றும் றொக்கட் தாக்குதல்களை பூநகரி மற்றும் கடல்நீர் ஏரிபகுதிகள் மீது மேற்கொள்ளப்பட்டதாகவும். இதனையடுத்து மீனவர்கள் அவசர அவசரமாக கரைதிரும்பியதாகவும் மக்களது இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.
ஐ.நா. செயலாளரின் விசேட கடிதம் ஜனாதிபதியிடம் ஏஞ்சலினா கையளிப்பு

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஏஞ்சலினா கனே நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசினார்.
நேற்று முற்பகல் வேளை ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
ஐ.நா. அமைப்பிற்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் தற்போதைய உறவுகள் தொடர்பாகவும் இனிவரும் காலங்களில் அந்த உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்தும் இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், ஐ.நா. அமைப்பு இலங்கையின் நடவடிக்கைகளுக்கு வழங்கும் ஒத்துழைப்புகள் தொடர்பாக தற்போதிருப்பதை விட நன்கு மக்களை தெளிவுபடுத்த வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி இரு தரப்பிலிருந்தும் சுட்டிக் காட்டப்பட்டிருப்பதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
இதேநேரம், ஏஞ்சலினா கனே அண்மையில் மட்டக்களப்பு மற்றும் நுவரேலியா மாவட்டங்களில் மேற்கொண்ட விஜயங்கள் பற்றி ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளதுடன் இந்த விஜயங்களை இடைஞ்சல்களின்றி முடித்துக்கொள்ள இலங்கை அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்புகளுக்கும் ஜனாதிபதியிடம் நன்றி தெரிவித்ததாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையில் இல்லாதவொரு நிலைமையை உருவாக்கி காண்பிக்க கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரும் எடுத்த முயற்சிகள் குறித்தும் இச் சந்திப்பின்போது ஜனாதிபதி ஏஞ்சலினா கனேயிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விஷேட கடிதமொன்றையும் கனே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளித்திருக்கிறார் என்றும் ஜனாதிபதி செலயக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் வெளிநாட்டமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோஹன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க இருவரும் கலந்து கொண்டனர்.

வெள்ளை வான் அட்டகாசம் மலையகத்திற்கும் விஸ்தரிப்பு
பண்டாரவளையில் 2 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டனர். ஒரு மணி நேர இடைவெளியில் சம்பவம்; பீதியில் மக்கள்
மலையகத்திலும் வெள்ளைவான் ஆட்கடத்தல்கள் ஆரம்பமாகியிருப்பதையடுத்து தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அச்சமும் பீதியும் ஏற்பட்டுள்ளது.
வடக்கு- கிழக்கிலும் தலைநகர் கொழும்பிலுமே இதுவரை காலமும் வெள்ளைவான்களில் வரும் ஆயுதபாணிகளால் தமிழர்கள் கடத்தப்பட்டு வந்தனர். தற்போது முதல் முறையாக மலையகத்தில் பண்டாரவளை நகரில் இந்த ஆட்கடத்தல்கள் இடம்பெற்றுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் ஒரே வானில் வந்த ஆயுதபாணிகளால் வர்த்தக நிலையப் பணியாளர் ஒருவரும் நகரசபை ஊழியரொருவரும் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
இவை குறித்து மேலும் தெரியவருவதாவது;
பண்டாரவளை நகரின் பிரதான வீதியிலுள்ள பிரபல பலசரக்குக் கடையொன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் வெள்ளை வானொன்றில் வந்த ஐவர் கடை ஊழியரை பலவந்தமாக இழுத்து தாங்கள் வந்த வானில் ஏற்றியுள்ளனர்.
கடத்தல் காரர்களுடன் அந்த இளைஞன் முரண்படவே அவ்விடத்தில் பலர் கூடி அந்த இளைஞனைக் கடத்திச் செல்வதைத் தடுப்பதற்காக வெள்ளை வானை சுற்றி வளைத்துள்ளனர்.
இதையடுத்து கடத்தல்காரர்கள் தங்கள் வசமிருந்த துப்பாக்கிகளை எடுத்து அங்கு நின்றவர்களை சுடப்போவதாக மிரட்டியதுடன், வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தவும் முற்படவே கடத்தல்காரர்களுக்கு எதிர்ப்புக் காட்டிய பொது மக்கள் அங்கிருந்து விலகியுள்ளனர்.
இதையடுத்து அந்த இளைஞனுடன், 253-5630 என்ற இலக்கத் தகடுடைய வெள்ளை வான் பதுளைப் பக்கமாக வேகமாகச் சென்று மறைந்துள்ளது.
யாழ்ப்பாணம் காரைநகர் மணற்பிட்டியைச் சேர்ந்த சடாட்சரம் திருவருள் (22 வயது) என்பவரே கடத்தப்பட்டவராவார். இவர் அந்த வர்த்தக நிலையத்தில் கடந்த நான்கு வருடங்களாக பணியாற்றி வந்துள்ளார்.
இது குறித்து வர்த்தக நிலைய உரிமையாளர் பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதேநேரம், இந்தக் கடத்தலால் பண்டாரவளை நகரில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்ட போது, இந்த இளைஞன் கடத்தப்பட்ட ஒரு மணி நேரத்தில் நகருக்கு மீண்டும் வெள்ளை வான் வந்துள்ளது.
இம்முறை அவர்கள் வாகனத் தரிப்பிடத்தில் நின்ற பண்டாரவளை நகர சபை ஊழியரான வேலுசாமி சுப்பிரமணியம் (28 வயது) என்ற இரு பிள்ளைகளின் தந்தையை ஆயுத முனையில் கடத்திச் சென்றுள்ளனர்.
இவர் மலையகத்தைச் சேர்ந்தவர். இவர் கடத்தப்பட்ட செய்தியும் நகரில் பரவவே நகரில் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பதற்றமேற்பட்டது.
உடனடியாக நகரிலுள்ள தமிழர்களின் கடைகள், வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதுடன், அனைவரும் வீடுகளினுள் முடங்கினர்.
இவ்விரு கடத்தல்கள் தொடர்பாகவும் ஊவா மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்.என்.பி. அம்பன்வெல, பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொசான் விஜயசிங்க ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பதுளை மாவட்ட வீதிச் சோதனை நிலையங்களில் அனைத்து வாகனங்களும் இரவிரவாக பலத்த சோதனைக்குட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Monday, February 25, 2008
மதவாச்சி ஊடாக நேரடியாக சென்றுவர வடபகுதி வாகனங்களுக்கு விசேட அனுமதிப்பத்திரம் - விபரங்கள் பொலிஸாரால் சேகரிப்பு

வவுனியாவில் இருந்து மதவாச்சி ஊடாக தென்பகுதிக்கு சென்று வருவதற்கான வாகனங்களுக்கு விசேட அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மதவாச்சியூடாக தெற்கே சென்று வரும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களின் விபரங்களை பொலிஸார் தற்போது திரட்டி வருகின்றனர். இவ்வாறு திரட்டப்பட்ட வாகனங்களின் விபரங்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னர் அவற்றுக்கு விசேட அனுமதிப்பத்திரங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வடபகுதியில் இருந்து தெற்கே வருகின்ற வாகனங்கள் மதவாச்சி சோதனைச் சாவடியூடாக செல்வதற்கு கடந்த 2 ஆம் திகதி முதல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் வடக்கே இருந்து வாகனங்களில் வருபவர்கள் மதவாச்சியில் அந்த வாகனத்தை விட்டு இறங்கி வேறு வாகனத்தில் ஏறி பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இதனால் வடக்கே இருந்து தெற்கே வரும் நோயாளர்களும், அரச தனியார்துறை அதிகாரிகளும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக வடபகுதியில் இருந்து வருகின்ற டாக்டர்களும் பாதிக்கப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சுக்கு முறையிட்டிருந்தது. வவுனியாவில் இப்பிரச்சினை தொடர்பாக டாக்டர்களும், மறியல் போராட்டமும் மேற்கொண்டிருந்தனர்.

ரம்பொடை சுரங்க பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது

மத்திய மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான சுரங்கப் பாதையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த சனிக்கிழமை உத்தியோகபூர்வமாககத் திறந்துவைத்தார்.225 மீற்றர் நீளமான ரம்பொட சுரங்கப் பாதை ஜப்பானிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் ரூபா 2 பில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாணத்தில் 54 கிலோ மீற்றர் நீளமான கம்பளை – நுவரேலியா வீதியையும் 17 கிலோ மீற்றர் தூரமான கம்பளை – நாவலப்பிட்டிய வீதியையும் இணைக்கும் வகையில் இந்தச் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து நடவடிக்கைகள் இலகுவாக்கப்பட்டு நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு இது பெரும் உந்துசக்தியாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.ரம்பொட சுரங்கப் பாதை திறப்பு நிகழ்வில் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, ஜப்பானிய தூதுவர் கியோஷி அராக்கி ஆகியோர் உட்பட அரசாங்க உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்தோனேஷியாவில் பாரிய பூமியதிர்ச்சி

இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவுப்பகுதியில் இன்று பாரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளது ரிச்டர் அளவில் இப் பூமியதிர்ச்சி 7.2 ஆகப் பதிவாகியுள்ளது. இப் பூமியதிர்ச்சி தலைநகர் ஜகார்ட்டா பகுதியிலும் உணரப்பட்டுள்ளது இதனையடுத்து கட்டிடங்களிருந்து மக்கள் வெளியேறியுள்ளனர். எனினும் இப் பூமியதிர்ச்சியால் இலங்கையில் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லையென அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பின் பல பகுதிகளில் சல்லடை போட்டு தேடுதல்

நகருக்குள் பிரவேசித்த அனைத்து வாகனங்களும் நுழைவாயில்களில் மறிக்கப்பட்டு கடம் சோதனை
கொழும்பு நகரை மையமாக வைத்து நேற்று ஞாயிற்றுக் கிழமை பாரிய தேடுதல் நடைபெற்ற அதேநேரம், கொழும்பு நகருக்குள் நுழைந்த அனைத்து வாகனங்களும் பலத்த சோதனைக்குட்படுத்தப்பட்டன.
கொழும்பின் புறநகர்ப் பகுதியான கல்கிசையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை தனியார் பயணிகள் பஸ்ஸில் இடம்பெற்ற குண்டுவெடிப்பையடுத்தே நேற்று இந்தப் பாரிய தேடுதல் நடைபெற்றது.
நேற்றுக்காலை 6 மணியளவில் ஆரம்பமான இந்தப் பாரிய தேடுதல் பிற்பகல் வரை நடைபெற்றுள்ளது. இதில் ஆயிரக் கணக்கான படையினரும் பொலிஸாரும் ஈடுபட்டனர்.
பிரதான மார்க்கங்களூடாக கொழும்பு மாநகருக்குள் வந்த அனைத்து வாகனங்களும் அனைத்து நுழைவாயில்களிலும் வழிமறிக்கப்பட்டு தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டன. இதனால் காலை முதல் நகர நுழைவாயில் பகுதிகளில் மிக நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் பல மணி நேரம் காத்திருந்தன.
பயணிகள் பஸ்கள் உட்பட அனைத்து வாகனங்களிலும் வந்தவர்கள் வாகனங்களைவிட்டு இறக்கப்பட்டு அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்கள் சோதனையிடப்பட்டதுடன்' பலர் தீவிர விசாரணைகளுக்குமுட்படுத்தப்பட்டனர்.
இந்த சோதனைகளால் நகரின் நுழை வாயில்கள் மற்றும் அதனை அண்டிய உட்பகுதிகளில் பெரும் போக்குவரத்து நெரிசலேற்படவே பஸ் பயணிகள் அவற்றை விட்டிறங்கி நீண்ட தூரம் நடந்து வந்து வேறு பஸ்களில் ஏறி பயணிக்கும் நிலையேற்பட்டது.
இந்தச் சோதனைகளின்போது பயணிகள் பஸ்களிலிருந்து பொருட்களும் வெளியே இறக்கப்பட்டு பலத்த சோதனைகளுக்குட்படுத்தப்பட்டன.
மோப்பநாய்களும் குண்டுகளைக் கண்டறியம் நவீன கருவிகளும் அனைத்து நுழை வாயில்களிலும் பயன்படுத்தப்பட்டன.
நுழைவாயில்களில் இடம்பெற்ற சோதனைகளை முடித்துக்கொண்டு நீண்டநேரத்தின் பின் நகருக்குள் நுழைந்தவர்கள் மேலும் பல இடங்களில் வழிமறிக்கப்பட்டு, வாகனங்களிலிருந்து இறக்கப்பட்டு பலத்த சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
நகர நுழைவாயில்களில் இந்தச் சோதனைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நகரினுள் பல பகுதிகளிலும் படையினர் பாரிய தேடுதல்களையும் சோதனைகளையும் நடத்தியுள்ளனர்.
நகரினுள் பல இடங்களில் வீதிச்சோதனைகள் நடைபெற்றதால் நகரினுள்ளும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன.
தமிழ்மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் படையினரும் பொலிஸாரும் இணைந்து தீவிர தேடுதல்களை நடத்தினர். இதன் போது பலர் கைதுசெய்யப்பட்டு அந்தந்தப் பகுதி பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
இந்தப் பாரிய தேடுதல்கள் மற்றும் சோதனைகள் காரணமாக நகரில் மக்கள் வீடுகளினுள் முடங்கினர். இதனால் பல வீதிகளில் மக்கள் நடமாட்டம் மிகக் குறைவாகவேயிருந்தது.

Friday, February 22, 2008
றம்பொட சுரங்கப்பாதை திறப்பு விழா

கம்பளை- நுவரெலியா வீதியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவதும் பிரதானமானதுமான றம்பொட சுரங்கப்பாதை மக்களின் பாவனைக்காக ஒப்படைக்கும் நிகழ்வு எதிர்வரும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கியோசி அராக்கி கலந்துகொள்ளவுள்ளார்.
நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கியோசி அராக்கி கலந்துகொள்ளவுள்ளார்.
முத்துமாரியம்மன் பஞ்சரத பவனியை தரிசிக்க மாத்தளைக்கு பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள்

தோரணங்கள், அலங்காரங்களுடன் நகரம் விழாக்கோலம்
வரலாற்று புகழ்மிக்க மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான பஞ்சரத பவனி நேற்று வியாழக்கிழமை காலை ஆரம்பமானது. நாட்டிலுள்ள பல்வேறு பிரதேசங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்ட இத்தேர்த்திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது.
தேவஸ்தான பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ சிவானந்த குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்களால் பூஜைகள் இடம்பெற்றதுடன் காலை 10.20 மணியளவில் பஞ்சரத பவனி வெளி வீதியுலா ஆரம்பமானது.
ஒவ்வொரு தேருக்கு முன்பாகவும் மேளதாள வாத்தியங்கள் சகிதம் கரகம், காவடி, கோலாட்டம், கும்மி போன்ற பல கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
திருகோணமலை உள்ளிட்ட வெளிமாவட்டங்களிலிருந்து வருகைதந்திருந்த இளைஞர், யுவதிகள் பாடசாலை மாணவர்கள் போன்ற பலரும் ஒவ்வொரு தேர்களுக்கு முன்னாலும் தேவாரம் உள்ளிட்ட திருப்பாக்களை இசைத்த வண்ணம் சென்றனர்.
பஞ்சரதங்களும் வீதிவலம் வந்த மாத்தளை பிரதானவீதியினதும் இராஜ வீதியினதும் இரு மருங்கிலுமுள்ள வர்த்தக நிலையங்கள் குடியிருப்புகள் யாவும் வாழை, கமுகு , மாவிலை, தோரணங்களாலும் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு மாத்தளை நகர் விழாக்கோலம் பூண்டிருந்தது.
மாத்தளை பொலிஸார் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்ததுடன் ஆயிரம் பொலிஸாரும் , 150 இளைஞர்களை உள்ளடக்கிய தொண்டர் படையினரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரின் சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் அமைப்பினர் முதலுதவி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
தேர்த் திருவிழாவையொட்டி நடைபெற்ற விசேட பூஜைகளில் நகர அபிவிருத்தி அமைச்சர் ரோகண திஸாநாயக்க , துணை முதல்வர் பாலித்த ஜயசேகர, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ராஜரட்ணம், சமூகஜோதி எஸ்.முத்தையா மற்றும் தொண்டர் படை முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Wednesday, February 20, 2008
அமைதிப் பேச்சுக்கள் காலத்திலும் கூட புலிகள் மீது தாக்குதல் நடத்தியது மகிந்த அரசாங்கம்: சந்திரிகா

சிறிலங்கா இராணுவத் தளபதி மீதான கொலை முயற்சிக்குப் பின்னர்தான் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதாக மகிந்த அரசாங்கம் கூறுவது பொய் என்றும் அமைதிப் பேச்சுக்கள் காலத்திலும்கூட புலிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.
பி.பி.சியின் சந்தேசியாவுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:
அனைத்துப் பிரதேசங்களுக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதன் மூலமே இலங்கையின் இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண முடியும்.
இனப்பிரச்சினைக்கு இராணுவ வழித் தீர்வு காண முடியாது. அதிகாரப் பகிர்வின் மூலமான தீர்வுதான் 20 ஆண்டுகளுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட எனது கணவர் விஜய குமாரதுங்கவுக்கு செலுத்துகிற சிறத்த இரங்கலாகும்.
சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான கொலை முயற்சி வரை விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்று தற்போதைய சிறிலங்கா அரசாங்கம் கூறுவது பொய்யானது.
அமைதிப் பேச்சுக்கள் நடைபெற்ற போதுகூட விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது மகிந்த அரசாங்கம்.
இலங்கையில் வெறும் அமைதி மட்டுமே தேவைப்படவில்லை. அமைதியும் மனிதாபிமானமும்தான் அங்கு தேவையானது. அது பல அரசியல்வாதிகளிடம் குறைவாகவே உள்ளது என்றார் அவர்.
Tuesday, February 19, 2008
ஐரோப்பாவில் புதிய தேசம்: கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம்

கொசோவோ நாடாளுமன்றம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூட்டப்பட்டு கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. ஐரோப்பிய நேரம் மாலை 5:00 மணிக்கு கொசோவோ நாடாளுமன்றத்தில் தலைமை அமைச்சர் ஹசிம் தாச்சி தனிநாட்டுப் பிரகடனத்தை மொழிந்தார்.
சேர்பியாவிலிருந்து பிரிந்து சென்று கொசோவோ தனிநாட்டினைப் பிரகடனப்படுத்தியதன் மூலம் ஐரோப்பாவில் புதிய தேசம் ஒன்று பிறந்துள்ளது.
கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த கொசோவோவின் அல்பேனிய மக்கள் தனிநாட்டுப் பிரகடனத்தினை உணர்வெழுச்சியுடன் வரவேற்று கொண்டாடுகின்றனர்.
"சுதந்திர கொசோவோ" அமைதிக்காகவும் பிரதேசத்தின் உறுதித்தன்மைக்காகவும் உழைக்கும் என பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர கொசோவோ ஒரு ஜனநாயக, பல்லினக் கலாச்சார சமூகமாக விளங்கும் என்பதோடு கலாச்சார மற்றும் மத உரிமைகளுக்கு உத்தரவாதமும் அளிக்கும் என பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பின்லாந்தின் முன்நாள் அரச தலைவர் மாத்தி ஆத்திசாரி தலைமையில் ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்ட வரைபின் அடிப்படையில், கொசோவோ தேசம் கட்டியெழுப்பப்படும்.
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் கொசோவோவிற்குரிய தனியான காவல்துறை மற்றும் படைக் கட்டுமானங்கள் நிறுவப்படும் எனவும் பிரகடனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தினை அங்கீகரிக்கவுள்ளன.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள, அதன் வெளியுறவு அமைச்சர்களின் உயர்மட்டச் சந்திப்பினைத் தொடர்ந்து கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தினை அங்கீகரிப்பது தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினைத் தொடர்ந்து, பெரும்பாலான உலக நாடுகளும் கொசோவோவை அங்கிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 100 வரையான உலக நாடுகள் தம்மை அங்கீகரிக்கும் என எதிர்பார்ப்பதாக கொசோவோ தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இரண்டு மில்லியன் மக்கள் தொகை கொண்ட கொசோவோவில் 92 விழுக்காடு அல்பேனியர்களும் 8 விழுக்காடு சேர்பியர்களும் வசிக்கின்றனர்.
சேர்பியாவிலிருந்து கொசோவோ தனிநாடாகப் பிரிவதனை தொடர்ச்சியாக எதிர்த்து வந்த சேர்பியா மற்றும் ரஸ்யா ஆகியன தனிநாட்டுப் பிரகடனத்தினை கண்டித்துள்ளன.
கொசோவோவை ஆக்கிரமித்து கொசோவோ மக்கள் மீது இன அழிப்புப் போரினை கட்டவிழ்த்து விட்ட ஸ்லோவடோன் மிலோசவிச்சின் சேர்பியப் படைகள், 1999 ஆம் ஆண்டு. நேட்டோப் படைகளால் வெளியேற்றப்பட்டன. 1999 ஆம் ஆண்டிலிருந்து ஐ.நாவினால் கொசோவோ நிர்வகிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 16,000 நேட்டோப் படைகள் அங்கு நிலை கொண்டிருந்தன.
கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம், ஒடுக்குமுறைக்குள்ளான தேசிய இனங்கள் பிரிந்து சென்று தனியரசினை அமைப்பதற்கு உரித்துடையவர்கள் என்ற உலகளாவிய பொதுமைப்படுத்தப்பட்ட கருத்தினை வலுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்துவிடுதலைப் போராட்டத்தை நடத்தி அதன் பாலான நகர்வுகளின் பின் தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக்கும் கொசோவோவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
உயிர்களை உவப்பீகை செய்து சுதந்திரம் இறைமை உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி விடுதலையை வென்றெடுத்துள்ள வகையில் தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக்கும் கொசோவோவுக்கு தமிழ்மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஒரு விடுதலைப் போராட்டத்தை ஏற்று அந்த மக்களுக்கு இறைமை உண்டு, தன்னாட்சி உரிமை உண்டு என்று அதனை அங்கீகரித்து, அதன் தனிநாட்டுப் பிரடனத்துக்கும் பாதுகாப்புக்கும் ஒத்துழைத்து செயற்படும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுக்கும் வாழ்த்துக்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.
ஒடுக்கப்பட்ட இனம் ஒன்றிற்கான தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, இறைமை என்பவற்றை கொசோவோவில் உலகப்பெரும் நாடுகள் அங்கீகரித்து தனிநாட்டுப் பிரகடனத்துக்கு ஒத்துழைக்கின்றமை தமிழினத்துக்கும் அனைத்துலகத்தின் பால் நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தினை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதுடன் இது உலக சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

Subscribe to:
Posts (Atom)