Monday, February 25, 2008

மதவாச்சி ஊடாக நேரடியாக சென்றுவர வடபகுதி வாகனங்களுக்கு விசேட அனுமதிப்பத்திரம் - விபரங்கள் பொலிஸாரால் சேகரிப்பு


வவுனியாவில் இருந்து மதவாச்சி ஊடாக தென்பகுதிக்கு சென்று வருவதற்கான வாகனங்களுக்கு விசேட அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மதவாச்சியூடாக தெற்கே சென்று வரும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களின் விபரங்களை பொலிஸார் தற்போது திரட்டி வருகின்றனர். இவ்வாறு திரட்டப்பட்ட வாகனங்களின் விபரங்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னர் அவற்றுக்கு விசேட அனுமதிப்பத்திரங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வடபகுதியில் இருந்து தெற்கே வருகின்ற வாகனங்கள் மதவாச்சி சோதனைச் சாவடியூடாக செல்வதற்கு கடந்த 2 ஆம் திகதி முதல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் வடக்கே இருந்து வாகனங்களில் வருபவர்கள் மதவாச்சியில் அந்த வாகனத்தை விட்டு இறங்கி வேறு வாகனத்தில் ஏறி பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இதனால் வடக்கே இருந்து தெற்கே வரும் நோயாளர்களும், அரச தனியார்துறை அதிகாரிகளும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக வடபகுதியில் இருந்து வருகின்ற டாக்டர்களும் பாதிக்கப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சுக்கு முறையிட்டிருந்தது. வவுனியாவில் இப்பிரச்சினை தொடர்பாக டாக்டர்களும், மறியல் போராட்டமும் மேற்கொண்டிருந்தனர்.

No comments: