
"சூரியன்', "கோல்ட்', "சன்' ,"ஷா' முதலிய எவ்.எம் அலைவரிசை வானொலிச் சேவை களை நடத்திவரும் ஆசிய ஒலிபரப்புக் கூட் டுத்தாபனத்துக்கு ஒலிபரப்புக்கான புதிய அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.இதனையடுத்து,இதுவரை தடைப்பட் டிருந்த இந்த வானொலிச் சேவைகள் இன் னும் சில தினங்களில் மீண்டும் ஆரம்ப மாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.அந்த நிறுவனத்தின் சிங்கள சேவை ஒன்றில் ஒலிபரப்பான செய்தியை ஒட்டி, அந்த நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் அரசினால் ரத்துச் செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே. இவ் விவகாரம் உயர் நீதி மன்றம்வரை சென்றது.இந்நிலையில், புதிய அனுமதிப்பத் திரம் அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டமையை அடுத்து, விரைவில் அதன் வானொலிச் சேவை கள் ஆரம்பமாகவிருக்கின்றன எனத் தெரி கின்றது.
No comments:
Post a Comment