யாழ்குடாவில் தற்போது அரங்கேறிவரும் சம்பவங்களை நோக்கும்
போது மரணம் மலிந்த பூமியாக காணப்படுவதை உணரக் கூடியதாக உள்ளது.
பொருளாதாரத்தைப் பொறுத்தளவில் அங்கு நாளாந்தம் ஒரு சிறிய குடும்பத்துக்கு
ஆயிரம் ரூபா போதாமையாக உள்ளது. விலைவாசி ஏற்றம் நாளும் மக்கள் மத்தியில்
அச்சத்தை ஏற்படுத்திவருகின்றது. அங்கு அதிஉச்ச ரீதியில் பண வீக்கம்
ஏற்பட்டுள்ளது. இதனால் உளரீதியில் பாதிப்புக்கள் ஏற்படுகின்றது. பல
குடும்பங்கள் யுத்தம் இடம்பெற்ற சூழ்நிலையில் பாதிக்கப்பட்டதைவிட தற்போது
அதிகமாகப் பாதிக்கப்படுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை யாழில் நாளாந்தம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுவருகின்றன. குடும்பத்தை நிர்வகிக்கும் குடும்பத் தலைவர்களே அதிகமாகத் தற்கொலை செய்துகொள்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயினும் இச்சடலங்கள் குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.
அண்மையில் யாழில் மீட்கப்பட்ட சடலங்களில் பல இனந்தெரியாத முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளமை பொதுமக்களும் உறவினர்களும் வழங்கிய தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது. சிங்கள இனவாதத்துக்கு துணைபோவோர் மட்டுமே அங்கு வாழக்கூடியதாக உள்ளது எனவும் ஏனையவர்கள் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அச்சத்துடனேயே நாட்களை நகர்த்துகின்றனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் கொள்ளைச் சம்பவங்களும் யாழ்ப்பாணத்தில் அதிகரித்தே காணப்படுகின்றன. ஆட்கள் இல்லாத வீடுகள், பாதுகாப்பற்ற வீடுகள் மற்றும் ஆண் துணையற்ற வீடுகள் என நன்கு இனங்காணப்பட்டு, சிங்கள அடிவருடிகளான ஒட்டுக் குழுக்களால் கொள்ளைகள் திட்டமிட்டு நிகழ்த்தப்படுகின்றன.
தற்போது தாம் நினைத்ததை நிறைவேற்றுவதிலேயே அரசுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்கள் செயற்பட்டுவருகின்றன. இது பூனை இல்லாத வீட்டில் எலி துள்ளிவிளையாடுவதாய் அமைந்துள்ளது.
அதாவது கடந்தவாரம் வடமாகணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை மடக்கி யாழ் மத்திய கல்லூரியில் நீச்சல் தடாகம் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு இடையூறு விளைவித்த நூற்றாண்டு மண்டபமும் இடித்தளிக்கப்பட்டதான அதிர்ச்சிச் சம்பவம் அனைவரையும் கவலை கொள்ளவைத்துள்ளது.
வடமாகாண ஆளுனர் சந்திரசிறீ மற்றும் ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளசின் இச் செயற்பாட்டிற்கு வடபகுதி கல்விச் சமூகம் கடும் அதிர்ப்தியை வெளியிட்டுள்ள அதேவேளை, ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டுள்ளது. ஆரம்பிக்கப்பட்டு பின்னர் நிதிப்பற்றாக்குறை காரணமாக முழுமையாக நிறைவேற்றப்படாமல் இடைநடுவில் நிறுத்தப்பட்டிருந்த குறித்த நீச்சல் தடாகம் அமைக்கும் வேலைகள், வடமாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள பாடசாலைகளுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஒதுக்கப்பட்ட 4.5 மில்லியன் ரூபாவினை வடமாகாண ஆளுனர் மடக்கிக் கொடுத்துள்ளார்.
கட்டி முடிவடைந்த மேற்படி நீச்சல் தடாகத்தினை திறந்து வைப்பதற்கு மகிந்தவை யாழுக்கு அழைத்திருந்தனர். அதற்கான ஏற்பாடுகள் பலமாக யாழ் மத்திய கல்லூரியில் இடம்பெற்றன. கல்லூரியை சுற்றி காப்பற் வீதிகள், மண்டபங்கள் வகுப்பறைகள் எல்லாம் புதுப்பொலிவு பெற்றுள்ளன. இவ்வாறு எல்லாவகையான ஏற்பாடுகளையும் சிறந்த முறையில் செய்துகொண்டிருக்கும்போது யாழ் மத்திய கல்லூரிக்கு சென்ற டக்ளஸ் நீச்சல் தடாகத்திற்கு முன்னால் உள்ள 100 வருடங்கள் பழைமை வாய்ந்த கட்டடத்தினை இடித்து மகிந்தவும் அவருடன் வருகின்ற பிரமுகர்களும் அமர்வதற்கான மேடையினை அமைக்குமாறு உத்தரவிட்டார்.
அந்த உத்தரவினை நடைமுறைப்படுத்த மறுத்த பாடசாலை அதிபர் அக் கட்டடத்தின் பழைமையான வரலாறுகளைக் கூறி அக்கட்டடம் வரலாற்று பொக்கிசம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று என்றும் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்தும் தொனியில் மிரட்டிய டக்ளஸ், நான் மீண்டும் வந்து பார்க்கும்போது இந்தக் கட்டடம் இருக்கக் கூடாது என்று சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்.
அதன் பின்னரும் இடிக்கப்படாமல் இருந்த அக்கட்டடம், இடிந்து விழும் அபாயத்தில் உள்ள
தால் உடனடியாக இடிக்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சிடம் இருந்து பாடசாலைக்கு உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அக்கட்டடம் இடித்தழிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தினால் கடும் சீற்றமடைந்துள்ள யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள், கடும் எதிர்ப்பினை வெளியிட்டதுடன், யாழ். கல்விச் செயற்பாடுகளிலும் அரசியல் தனது ஆதிக்கத்தினை கடுமையான முறையில் செலுத்தி வருகின்றது என சாடியுள்ளனர்.
இந்நிலையில் வேலையற்ற பட்டதாரிகள் மகிந்தவை சந்திப்பதற்காக யாழ் பெருமாள் கோவிலடிப் பகுதியில் ஒன்று கூடியிருந்தனர். இதனையறிந்த யாழ்.காவல்துறையினர், அவர்களை கலைந்து செல்லுமாறு போலியான பிடியாணைப் பத்திரமொன்றைக் காட்டி விரட்டியடித்தனர்.
இதனையடுத்து, வேலையற்ற பட்டதாரிகள் டக்ளசிடம் சென்றனர். இவர்களின் வருகையை அறிந்த டக்ளஸ், பட்டதாரிகளை நீண்ட நேரம் காக்க வைத்துவிட்டு, உங்களில் நூறுபேருக்கு மட்டுமே நியமனம் எனவும் நீங்கள் மகிந்தவை முன்னரே ஆதரித்திருந்தால் உங்களுக்கு நியமனம் முதலே கிடைத்திருக்கும் நீங்கள் மகிந்தவை ஆதரிக்காமல் விட்டமையினாலேயே இந்த நிலைமை என கடும் தொனியில் மிரட்டியுள்ளார்.
அத்துடன் மகிந்தவின் யாழ் வருகையையட்டி மக்களுக்கு பல கெடுபிடிகளை இராணுவத்தினரும் ஒட்டுக்குழுக்களும் மேற்கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம் தமிழ் உறவுகளே இது சிந்திக்கும் நேரமல்ல செயற்படும் நேரம்.
(சூறையாடல்கள் தொடரும்)
நன்றி :ஈழமுரசு