ஜெனிவாவில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை
நிறைவேற்றப்பட்ட நிலையில், குழப்பமடைந்துள்ள சிங்களம் ஜெனிவா விடயம்
தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான செய்திகளை வெளியிட்டு வருகின்றது.
சிறீலங்கா அரசாங்கத்திற்கும் அதில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கும் தொடர்பில்லாததுபோலவே சிறீலங்காவினால் தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இவ்வாறான இனவாதப் போக்குடைய அரசு சர்வதேசத்தையே ஏமாற்றுவது போன்று தகவல்களை வெளிவிடும் நிலையில் தமிழ் மக்கள் விடயத்தில் இவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதுபற்றி சர்வதேசம் புரிந்துகொள்ளும் என்பது திண்ணம்.
இந்நிலையில் பௌத்த மதபீடம் ஒன்றை உருவாக்கும் வேலைத்திட்டம் ஒன்றுக்கு வட பகுதித் தமிழ் மக்களிடம் இருந்து பணம் பிடுங்கும் முயற்சியில் சிங்களம் இறங்கியுள்ளது. அநுராதபுரம் மகா மேகவன விகாரைக்கு அருகாமையில் ‘சந்தகிரி சாயா’ என்ற பெயரிலான பௌத்த பீடம் ஒன்றை அமைப்பதற்கு சிங்கள இராணுவத்தினரும் சிங்கள காவல்துறையினரும் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் பொது மக்களிடம் பணம் கறக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்னிலங்கையில் பௌத்த மதக் கட்டடம் ஒன்றை அமைப்பதற்கு வடபகுதி மக்களிடம் இருந்து ஏன் பணம் கறக்கவேண்டும் என பொது மக்கள் தமது கடும் ஆட்சேபனையை வெளியிட்டுள்ளனர். கடந்த 30 வருடங்களாக சிங்கள இராணுவத்தினர் தமிழர் தாயகத்தின் மீது சர்வதேசத்தின் உதவியுடன் முடுக்கிவிட்ட இனஅழிப்பு யுத்தம் காரணமாக வடபகுதியில் ஏராளமான இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்கள் அழிந்துள்ளன.
இவற்றைப் புனரமைப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாத நிலையில் தென்னிலங்கையில் பௌத்த பீடம் அமைப்பதற்காக வடக்குத் தமிழ் மக்களிடம் நிதி கறக்கப்படுகிறது. பௌத்த மகா சங்கத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்படவுள்ள மேற்படி மத பீடத்திற்கு பெருந்தொகையான நிதி தேவையென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நிதி கோரி அச்சிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் பற்றுச் சீட்டுக்கள் வடபகுதியில் விற்கப்படுகின்றன. சிங்கள மொழியில் அச்சிடப்பட்ட மேற்படிபற்றுச் சீட்டு ஒன்று 100 ரூபா வீதம் விற்கப்படுகின்றது.
மேற்படி கட்டடம் அமைப்பதற்காகத் தெரிவுசெய்யப்பட்ட கல் ஒன்றின் விலை 50 ரூபா என்றும் ஒரு பற்றுச் சீட்டை 100 ரூபாவுக்கு வாங்குவதன் மூலம் மேற்படி மத பீடத்தை அமைப்பதற்கு 2 கற்களை அன்பளிப்புச் செய்யுமாறும் சில இடங்களில் பொதுமக்கள் வற்புறுத்தப்படுகின்றனர். யாழ்ப்பாணத்தில் வீதிகளால் செல்கின்ற பொது மக்களை மறிக்கின்ற படையினரும் காவல்துறையினரும் மேற்படி பற்றுச் சீட்டு விற்பனையில் ஈடு
படுவதை அவதானிக்க முடிவதாக பொதுமக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மேற்படி மதபீடத்தை அமைப்பதற்காக வன்னியிலுள்ள வர்த்தககர்களிடம் படையினர் 5000 ரூபா வீதம் பணம் அறவிட்டு வருவதாகவும் வர்த்தகர்கள் அச்சத்தின் காரணமாக பணத்தை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது என்பதைப் போல ஏற்கனவே யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் இவ்வாறான அராஜகங்கள் பல சிங்கள இனவாத அரக்கர்களால் அரங்கேற்றப்பட்டுவருகின்றன.
இவ்வாறே மட்டக்களப்பில் சிறீலங்கா அரசின் ஒட்டுக்குழு அமைப்பான பிள்ளையான் குழுவினரால் கப்பம் கோரும் நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிவரும் அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து கப்பம் கோரும் நடவடிக்கையில் ஒட்டுக்குழு பிள்ளையான் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வறிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாணத்தில் இயங்கிவரும் அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இவ்வாறு கப்பம் கோரப்படுவதாக சிறீலங்காவில் வெளியாகும் சிங்கள நாளிதழ் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
பிள்ளையானும் அவரது சகாக்களுமே இவ்வாறு கப்பம் கோரி வருகின்றனர். கப்பம் கோரல் அச்சுறுத்தல்களினால் பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியவில்லை என அரச சார்பற்ற நிறுவனங்கள் விசனம் தெரிவித்துள்ளன. கப்பம் வழங்காவிட்டால் கிழக்கில் எவ்வித பணிகளையும் மேற்கொள்ள இடமளிக்கப் போவதில்லை என பிள்ளையானும் அவரது சகாக்களும் எச்சரிக்கை விடுத்து வருவதாக சிங்கள நாளிதழில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் அமைந்துள்ள ஓர் அரச சார்பற்ற நிறுவனத்திற்கு பிள்ளையானும் அவரது சகாக்களும் அடிக்கடி தொலைபேசியில் கப்பம் கோரி மிரட்டல் அழைப்புக்களைவிடுத்து வருகின்றனர். சில அரச சார்பற்ற நிறுவனங்கள் வருடாந்தம் பில்லியன் கணக்கான ரூபாவினை கிழக்கு அபிவிருத்திப் பணிகளுக்காக செலவிட்டு வருகின்றன.
ஆயுததாரிகள் புடைசூழ பயணம் செய்யும் பிள்ளையான் அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிகளுக்கு பெரும் தடையாக உள்ளார் எனவும் அந்த சிங்கள நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, மட்டக்களப்பில் தற்போது கப்பம் கோரிக் கடத்தப்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
மட்டக்களப்பு வாகரை பகுதியில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக வாகரை காவல்
துறையில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிற்றுந்து ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர்களால் குறித்த இளைஞன் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
வாகரை - பால்சேனையைச் சேர்ந்த தணிகாசலம் ஆனந்தகிசோத் என்ற 22 வயது இளைஞனே கடந்த வாரம் கைத்துப்பாக்கி முனையில் அவரது வீட்டில் இருந்து கடத்தப்பட்டுள்ளார். சிற்றுந்தில் வந்த துப்பாக்கிதாரிகள் வீட்டிற்குள் நுழைந்து தந்தை பற்றி விசாரித்ததாகவும் தந்தை வீட்டில் இல்லாததால் மகனை கடத்திச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பல சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. சர்வதேசத்தின் பார்வை சிறிலங்காவை நோக்கி இருக்கின்றபோதும் இவ்வாறான தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இதனைத் தடுத்து நிறுத்த சர்வதேசம் விரைந்து செயற்படவேண்டியதே இன்றைய தேவையாக உள்ளது. உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகளே சர்வதேசத்தின் காதுகளுக்கு ஒருமித்துக் குரல்கொடுப்போம்! இது சிந்திக்கும் நேரமல்ல நாம் சிந்தித்து செயற்படும் நேரம்!
(சூறையாடல்கள் தொடரும்)
நன்றி : ஈழமுரசு

No comments:
Post a Comment