தமிழ்மக்களின் நீண்ட கால அபிலாசைகளை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்தும் வகையிலும், அரசியல் ரீதியிலும், ஐனநாயகத்தேர்தலின் மூலமும் நிறைவேற்றிக்கொள்ளவும் என தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது,வாக்களிக்கத் தகுதியுள்ளோர் யார்?
தமிழீழத்தைச் சேர்ந்த தமிழ்மக்களும், பிரெஞ்சுக்குடியிருமையும், வதிவிடவுரிமை, அகதிகள் அந்தஸ்து பெற்ற தமிழ்மக்கள் அனைவரும் வாக்களிக்கும் தகுதி பெற்றோராகும். கடவுச்சீட்டு, அடையாள அட்டை, பிறப்புச்சான்றிதழ் ஏதாவதொன்றின் மூலப்பிரதி காண்பித்தல் வேண்டும்.
எப்போது?
டிசெம்பர் 12 திகதி சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் இரவு 20.00 மணிவரையும்
டிசெம்பர் 13 திகதி ஞாயிற்றுக்கிழமை 8.00 மணிமுதல் பி.பகல் 15.00 மணிவரையும்இத் தேர்தல் நடைபெறப்போகும் இடம்
மாநில அதிகாரபீடத்திற்குட்பட்ட பிரதேசங்களிலும், வாக்குசாவடிகள் மாநகர ரீதியாகவும் வைக்கப்படும் ( பிரெஞ்சு நாட்டின் தேர்தல் நடைமுறைகளில் இடம் பெறும்) ஆம், இல்லை என்பதை தெரிவு செய்து தபால் உறையினுள் இட்டு அதற்குரிய பெட்டியில் இடுதல். (இதனுடைய பூரணமான விளக்கங்கள் பின்னர் அறியத்தரப்படும்)
அறிக்கை விடுபவர் ( தெரிவிப்பவர்) வாக்களிப்பவர் தெரிவிப்பது
இலங்கைத்தீவின் தமிழ்மக்களாகிய நாம் தனித்துவமான தேசியமும், பாரம்பரியதாயகமும், சுயநிர்ணய உரிமையும் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் இத் தீவின் வடக்கு கிழக்கு நிலப்பரப்பின் சுதந்திரமும், இறைமையும் கொண்ட தமிழீழ அரசு உருவாக வேண்டும் என நான் விரும்புகின்றேன்.
