தோரணங்கள், அலங்காரங்களுடன் நகரம் விழாக்கோலம்
வரலாற்று புகழ்மிக்க மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான பஞ்சரத பவனி நேற்று வியாழக்கிழமை காலை ஆரம்பமானது. நாட்டிலுள்ள பல்வேறு பிரதேசங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்ட இத்தேர்த்திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது.
தேவஸ்தான பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ சிவானந்த குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்களால் பூஜைகள் இடம்பெற்றதுடன் காலை 10.20 மணியளவில் பஞ்சரத பவனி வெளி வீதியுலா ஆரம்பமானது.
ஒவ்வொரு தேருக்கு முன்பாகவும் மேளதாள வாத்தியங்கள் சகிதம் கரகம், காவடி, கோலாட்டம், கும்மி போன்ற பல கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
திருகோணமலை உள்ளிட்ட வெளிமாவட்டங்களிலிருந்து வருகைதந்திருந்த இளைஞர், யுவதிகள் பாடசாலை மாணவர்கள் போன்ற பலரும் ஒவ்வொரு தேர்களுக்கு முன்னாலும் தேவாரம் உள்ளிட்ட திருப்பாக்களை இசைத்த வண்ணம் சென்றனர்.
பஞ்சரதங்களும் வீதிவலம் வந்த மாத்தளை பிரதானவீதியினதும் இராஜ வீதியினதும் இரு மருங்கிலுமுள்ள வர்த்தக நிலையங்கள் குடியிருப்புகள் யாவும் வாழை, கமுகு , மாவிலை, தோரணங்களாலும் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு மாத்தளை நகர் விழாக்கோலம் பூண்டிருந்தது.
மாத்தளை பொலிஸார் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்ததுடன் ஆயிரம் பொலிஸாரும் , 150 இளைஞர்களை உள்ளடக்கிய தொண்டர் படையினரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரின் சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் அமைப்பினர் முதலுதவி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
தேர்த் திருவிழாவையொட்டி நடைபெற்ற விசேட பூஜைகளில் நகர அபிவிருத்தி அமைச்சர் ரோகண திஸாநாயக்க , துணை முதல்வர் பாலித்த ஜயசேகர, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ராஜரட்ணம், சமூகஜோதி எஸ்.முத்தையா மற்றும் தொண்டர் படை முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment