Monday, February 25, 2008

ரம்பொடை சுரங்க பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது




மத்திய மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான சுரங்கப் பாதையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த சனிக்கிழமை உத்தியோகபூர்வமாககத் திறந்துவைத்தார்.225 மீற்றர் நீளமான ரம்பொட சுரங்கப் பாதை ஜப்பானிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் ரூபா 2 பில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாணத்தில் 54 கிலோ மீற்றர் நீளமான கம்பளை – நுவரேலியா வீதியையும் 17 கிலோ மீற்றர் தூரமான கம்பளை – நாவலப்பிட்டிய வீதியையும் இணைக்கும் வகையில் இந்தச் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து நடவடிக்கைகள் இலகுவாக்கப்பட்டு நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு இது பெரும் உந்துசக்தியாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.ரம்பொட சுரங்கப் பாதை திறப்பு நிகழ்வில் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, ஜப்பானிய தூதுவர் கியோஷி அராக்கி ஆகியோர் உட்பட அரசாங்க உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments: