Friday, February 29, 2008

கொழும்பு அழுத்மாவத்தை குண்டு வெடிப்பு: காவல்துறையினர் உட்பட 7 பேர் காயம்


கொழும்பு கொட்டகேனா வோல் லேன் அழுத்மாவத்தை மோதரை ஹிப்பாவத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் குண்டு வெடித்துள்ளது.இன்று வெள்ளிக்கிழமை காலை 6.10 மணியளவில் தேடுதல் நடவடிக்கையின் போது வீடு ஒன்றினைக் காவல்துறையினர் சோதனையிட்ட போது, சந்தேகநபர் குண்டினை வெடிக்க வைத்ததாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இதன்போது 3 மகளிர் காவல்துறையினர் உட்பட 4 காவல்துறையினரும் 3 பொதுமக்களுமாக 7 பேர் காயமடைந்துள்ளனர். சந்ததேகநபரின் உடல் சிதறிப் பலியாகியுள்ளார்.காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த காவல்துறை அதிகாரியின் நிலை கவலைகிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டுத் தாக்குதலையடுத்து சம்பவ இடத்திற்கு மேலதிக படையினரும் காவல்துறையினரும் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டதோடு, அப்பகுதியில் மேலும் சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.தற்கொலை அங்கி -1தற்கொலை இடுப்புபட்டி -1கிளைமோர் குண்டுகள் - 6கைக்குண்டுகள் - 4 ஆகியன சம்பவ இடத்தில் நடத்திய தேடுதலின்போது படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது.தற்கொலைதாரி தங்கியிருந்த வீட்டின் காவல்துறையினர் சென்றபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. வீட்டின் கதவை திறக்குமாறு காவல்துறையினர் உரத்துக் கூறியும் கதவு திறக்கப்படவில்லை.இதனையடுத்து காவல்துறையினர் கதவை உடைத்து உட்சென்றபோது தற்கொலைதாரி குண்டு வெடிக்க வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: